முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்றுகடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, ஆக. - 4 - இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 21 ரன்னிலும், 2 வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 4 வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 2 வது ஆட்டத்தில் இலங்கை 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.  இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் இன்று 4 ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். பேட்டிங்கில் விராட் கோலி, காம்பீர், ஷேவாக், ரெய்னா ஆகியோர் சிறப்பாக ஆடி வருவது அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.  ரோகித்சர்மா 6 ஆட்டத்திலும், சோபிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரசாகோவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழந்தது பரிதாபமே. இன்றைய போட்டி பகல், இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.   
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago