ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. - 5 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளி ருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரி வில் இந்தியாவின் நட்சத்திர வீராங்க னையான சாய்னா நெக்வால் 3- வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக் கம் வென்றார்.  இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் 30 - வது ஒலிம்பிக் போட்டிகள் வெகு விமர்சையாக கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக நடந்து வரு கிறது.  இதில் சாம்பியன் பட்டம் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களம் இறங்கி உள்ளனர். இந் தப் போட்டியை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் கண்டு களி த்து வருகின்றனர். 

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா ஒற்றையர் பிரிவில் கா லிறுதி வரை சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.  ஆனால் அரை இறுதியில் அவர் இந் தோனேசிய வீராங்கனை மற்றும் உலக முன்னாள் நம்பர் - 1 வீராங்கனயிடம் போராடி தோல்வி அடைந்தார்.  அரை இறுதிவரை முன்னேறிய சாய் னாவுக்கு நேற்று வெண்கலப் பதக்கம் அளிக்கப்பட்டது. இதில் சீன வீராங்க னை பங்கேற்காததால் இந்திய வீராங்க னைக்ககு பதக்கம் கிடைத்தது.  ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நெக் வால் பெற்றுத் தந்த முதல் பதக்கம் இதுவாகும். மற்றொரு இந்திய வீர ரான காஷ்யப் ஒற்றையர் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.   

முன்னதாக மகளிர் இரட்டையர் பிரிவி ல் ஜுவாலா கட்டா மற்றும் அஸ்வினி ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவி ல் ஜுவாலா கட்டா மற்றும் டிஜு ஜோடியும் தோல்வி அடைந்து வெளி யேறின.  ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் மற்ற வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் தோல்வி அடைந்த போதிலு ம், நட்சத்திர வீராங்கனையான சாய் னா பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக் கிறது. 3 -வது மற்றும் 4 -வது இடத்திற்கான போட்டியில் சாய்னா, சீன வீராங்க னை வாங் ஜின்னுடன் மோத திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சீன வீராங்கனை போட்டியி ல் இருந்து விலகியதால் சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: