முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் வெளிநாடு சென்று பயிலும் புதிய திட்டம்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.8 - ஆசிரியர்கள், மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். அனைத்து அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான கூட்டம் நேற்று சென்னையிலுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றியதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா உயர் கல்வியல் மாணவர் மொத்த சேர்க்கை விகிதத்தை எடீஙு 2023-க்குள் 25 விழுக்காடு அடைய வேண்டும் என்ற இலக்கு வகுத்துள்ளார். அதை அடைவது குறித்தும், தரமான உயர் கல்வி அனைவருக்கும் கிடைக்கச் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த இலக்கினை எட்டுவதற்காக, ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி மேம்பாடு, பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டிணைவு மையங்கள் நிறுவுதல், ஆசிரியர்கள், மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் புதிய திட்டம், தொழில்நுட்பப் அடைகாப்பு மற்றும் கிராமப்புறங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பல்கலைக்கழக மையங்கள் பல்கலைக்கழங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வடிவ கருவிகள் தயாரிக்கும் மையங்கள் நிறுவதல், பல்கலைக்கழக நூலகங்களை இணையதளம் மூலம் கல்லூரிகளுடன் இணைத்தல், மென்திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து நடைமுறைப்படுத்துதல்.

பல்கலைக்கழகங்களில் கலைத் திட்டம் மேம்பாட்டு மையம் காணொளி காட்சியுடன் நவீன வகுப்பறைகள் அயல் மொழி ஆய்வகங்கள் தொழில் முனைவோர் பயிற்சி மையம்  போன்றவற்றை உருவாக்குவது,  வெளிநாட்டு வல்லுநர்களை அழைத்துப் பயிற்சி அளித்தல் போன்ற சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு நிதி உதவியும் அரசு அளித்துள்ளது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு, சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

தமிழகம், உயர் கல்வி கற்றலுக்கான சர்வதேச மையமாக உருவாக்குவதற்காக செயல்முறைகள் அனைத்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இவ்வாறு அவர் அமைச்சர் கூறினார்.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தில் வகுக்கப்பட்ட செயல் திட்டங்கள்:-

விஷன் 2023 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அரசின் உதவித்திட்டங்கள்.

ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் தொடர்பாக மத்திய அரசினால் முன்மொழியப்பட்ட தேசிய குழுவினைத் தோற்றுவித்தல், மத்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட மேத்தா பல்கலைக்கழகத்தை உருவாக்குதல், புதிதாக துவங்கப்படவுள்ள பட்டயப் படிப்பு மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட பட்டயப் படிப்பிற்கு தரம் நிர்ணயித்தல், விருப்பார்ந்த தெரிவு முறை திட்டத்தினை திருத்தி அமைத்தல் மற்றும் அத்திட்டத்தின் மதிப்பீடு புள்ளிகளை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிடைய மாற்றுதல் குறித்து, தற்போதைய தேர்வு முறையை மேம்படுத்துதல் குறித்து, கல்லூரி ஆசிரியர்களுக்கான செட் (மாநில தகுதி தேர்வு)வின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர் தொழிலினை மேம்படுத்துவதற்காக புதிய தரம் மற்றும் தகுதிகளை நிர்ணயித்தல், ஆசிரியர்கள் மாணவர்கள் மதிப்பீடு செய்யும் முறையையும் ஆசிரியர்கள் கல்வி நிலையங்கள் மதிப்பீடு செய்யும் முறையையும் கட்டாயமாக்குதல்,

உயர்கல்வியின் வெளிப்படையான நம்பகத்தன்மையை உருவாக்குதல், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் கீழ் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தர நிர்ணய பிரிவுகளில் மாநில தர நிர்ணயத்தை கண்காணித்தல், அனைத்து இளநிலை பாடத்திட்டங்களில் நான்கு பருவங்களில் தமிழை முதல் மொழியாக சேர்ப்பது குறித்து, பட்டமளிப்பு விழாக்களின் முறைகளில் திருத்தம் கொண்டுவருதல் ஆகியன ஆகும். 

கூட்டத்தில் உயர் கல்வித்துறை செயலர் ஸ்ரீதர், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago