முக்கிய செய்திகள்

மதுரையில் ஜெயலலிதாவுக்கு பூரண கும்பத்துடன் வரவேற்பு

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
3cartoon

மதுரை,ஏப்.- 4 - மதுரையில் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பூரண கும்பத்துடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரை காளவாசலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரது பேச்சை கேட்பதற்காக அந்த பகுதியில் அலைகடலென மக்கள் திரண்டிருந்தனர். கோடை வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெள்ளம்போல் திரண்டு ஜெயலலிதாவின் பேச்சை கேட்டார்கள். முன்னதாக நேற்றுமாலை 4-15 மணி அளவில் ஜெயலலிதா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அவரை பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கழக செயலாளர்கள் செல்லூர் கே.ராஜூ, எம்.முத்துராமலிங்கம் வேட்பாளர்கள் ஏ.கே.போஸ், கா.தமிழரசன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா பிரசார வேனில் ஏறி வெளியே வந்தார். அவருக்கு நத்தம் ரோட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்பத்துடன் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா பிரசார வேனில் தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லூர் வந்தார். அங்கு கைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று உரத்த குரலில் கேட்டுக்கொண்டனர். பின்னர் கைலாசபுரம்,ஈ.எஸ்.ஐ. பாத்திமா கல்லூரி சந்திப்பு வழியாக தீக்கதிர் அலுவலகம் பெத்தானியபுரம் பகுதியை வந்தடைந்தார். அங்கு கட்டிட சங்க தொழிலாளர்கள், வெள்ளையடிக்கும் தொழிலாளர்கள், சுண்ணாம்பு காளவாசலில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், ஒர்க்ஸ்ஷாப்பில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருபுரமும் திரண்டு நின்று இரட்டை விரலை காண்பித்து தங்களது ஆதரவை வரவேற்பின் மூலம் தெரிவித்தனர். பின்னர் காளவாசலை வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பழங்குடி மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்கள் சாட்டை அடித்தும் பெண்கள் உருமி அடித்தும் ஆட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன் பின்னர் காளவாசலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் மதுரை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைபாண்டி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, துணைச்செயலாளர் சி.தங்கம், இணைச்செயலாளர் குமுதா, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், அணி செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், ஷ.ராஜலிங்கம், கா.டேவிட் அண்ணாதுரை, வையைமாரி, பகுதிகழக செயலாளர்கள் கே.ஜெயவேல், தளபதி ஆர்.மாரியப்பன், பூமிபாலகன், அண்ணாநகர் என். முருகன், தொகுதி கழக செயலாளர்கள் மேற்கு எஸ். மாரியப்பன், மத்தி எஸ்.குமார்,வடக்கு எம்.ரவிச்சந்திரன், தெற்கு எம்.ரவீந்திரன், வடக்குத்தொகுதி இணைச்செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பேங்க் மாரியப்பன், மேற்குதொகுதி இளைஞரணி செயலாளர் ஆட்டோ விஜயன், மாவட்ட பேரவை துணைத்தலைவர் புதூர் அபுதாகீர், வடக்கு 1-ம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.கே.நகர் மணி, மத்திய 1-ம் பகுதி இளைஞரணி செயலாளர் கே.எஸ்.சஷிகுமார், தொகுதி கழக இணைச்செயலாளர் செல்லூர் எம்.எஸ்.சுப்பு, மகளிரணியை சேர்ந்த தேனம்மாள், தெய்வம் கணபதி, கேசவ பாண்டியம்மாள், புதூர் பாப்பா, ஆர்.ஜோதி, எம்.கல்யாணி, பி.புஷ்பா, வேலம்மாள், டி.ஜெயபாக்கியம், எம்.செல்வி, கணபதி, பாண்டியம்மாள், தலைமைகழக பேச்சாளர் அழகரடி ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா காளவாசலில் இருந்து புறப்பட்டு அரசரடி,புதுஜெயில்ரோடு, கிரம்மர் புரம், கரிமேடு, மதுரா கோட்ஸ் மேம்பாலம், சிம்மக்கல், யானைக்கல், வழியாக சென்றார். அந்த பகுதியில் அவருக்கு ரோட்டின் இருபுறமும் இருந்து பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் யானைக்கல், கல்பால மேம்பாலம், கோரிப்பாளையம் தேவர் சிலை தல்லாகுளம், அழகர்கோயில் ரோடு வழியாக சங்கம் ஓட்டலை அடைந்து ஜெயலலிதா நேற்று இரவு அங்கு தங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: