முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்கல்வி மாணவர்களுக்கு 19- 20 தேதிகளில் 2-வதுகட்ட கவுன்சிலிங்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 14 - தொழில்கல்வி மாணவர்களுக்கு என்ஜினீயரிங் 2​வது கட்ட கவுன்சிலிங் வரும் 19 மற்றும் 20-ந் தேதிகளில் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 510 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங்கை நடத்தி வருகிறது. கடந்த ஜூலை 13-​ந்தேதி முதல் பொதுகவுன்சிலிங் (பிளஸ்​2 தொழில்கல்வி படிக்காதவர்கள்) நடந்து வருகிறது. இந்த கவுன்சிலிங் முதலில் 14-​ந்தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அது 18-​ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தொழில்கல்வி மாணவ​மாணவிகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 7-​ந்தேதி முதல் 11-​ந்தேதி வரை முதல் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இப்போது பொது கவுன்சிலிங் முடிந்த பின்னர் 2​வது கட்ட தொழில் கல்வி கவுன்சிலிங் 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற இருக்கிறது. பிளஸ்​2 தேர்வில் பெயிலாகி இந்த வருடம் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்வதற்காக 21-​ந்தேதி கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

மேலும் இதுவரை நிரப்பப்படாமல் உள்ள அருந்ததியினருக்கான இடங்களை நிரப்ப ஆதிதிராவிடர் மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதற்கான கவுன்சிலிங் 22-​ந்தேதி நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் மூலம் இதுவரை ஒரு லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த தகவலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்