முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 14 - சென்னையில் சுதந்திரதின விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புக்கு 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் சுதந்திர தினவிழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களும் தயாராகி வருகின்றது. டெல்லியிலும் சுதந்திரதினவிழா ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் நடைபெறும் விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தமிழகத்திலும், சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. சென்னை கோட்டை கொத்தளத்தில், முதல்​அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரதின உரை நிகழ்த்த உள்ளார். சுதந்திரதின விழாவை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடத்திட கோட்டை கொத்தளம் தயார் நிலையில் புத்தம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கோட்டை கொத்தளம் முன்பு 2 முறை போலீசாரின் பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். சுதந்தின விழாவையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீசார்  பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட உள்ளனர். சுதந்திர தின விழா நடைபெற உள்ள கோட்டை கொத்தளத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானங்களை லஸ்கர்​இ​தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரித்துள்ளது. எனவே டெல்லி விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது போல சென்னை விமானநிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு அரண் உருவாக்கப்பட்டு உள்ளது. இது போல சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள்,  கோயம்பேடு உட்பட பஸ் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை போலீசார் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago