முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினத்தையொட்டி11 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 15 - சுதந்திர தினத்தையொட்டி இந்த ஆண்டு 11 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார். இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் ரா.ராஜகோபால் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புலன் விசாரணைப் பணியில் மிகப்சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்களை வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.  அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- 1. சி.ராஜேஸ்வரி- காவல் கண்காணிப்பாளர், குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, தெற்கு மண்டலம், சென்னை. 2. பி.மலைச்சாமி- காவல் துணை கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, திருச்சி. 3. ச.ஜெயச்சந்திரன்- காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, சென்னை. 4. நா.பாலசுப்பிரமணியன்- காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, சேலம் மாநகரம். 5. க.அண்ணாதுரை- காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, திருவண்ணாமலை. 6. கோ.கி.கண்ணன்- காவல் ஆய்வாளர், விழுப்புரம் நகர காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.  இதேபோன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியை பாராட்டி கீழ்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.  அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. கி.பி.சண்முகராஜேஷ்வரன்- காவல்துறை இணை ஆணையாளர், தெற்கு மண்டலம், சென்னை மாநகரம். 2. டாக்டர் எம்.சுதாகர்- கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, தலைமையிடம், சென்னை. 3. சி.ராஜேந்திரன்- காவல் துணை கண்காணிப்பாளர், (வகை ஒன்று), க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, தஞ்சாவூர் மாவட்ட பிரிவு. 4. சி.ப்ளோரா ஜெயந்தி- காவல் துணை கண்காணிப்பாளர், (வகை ஒன்று), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சென்னை. 5. இ.ராஜேஸ்வரி- காவல் ஆய்வாளர், மாநகர குற்றப்பிரிவு- ஐஐ சென்னை மாநகரம்.   விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுவார்கள்.  மேற்கண்ட விருதுகள் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்