முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கோட்டையில் சுதந்திரதினம் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றினார்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 16 - 65 வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் கொடி ஏற்றி வைத்து சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கினார். 65 வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சென்னை தலைமை செயலக கோட்டை கொடி மரத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை 9.30 மணி அளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக 9.15 மணிக்கு போர் நினைவு சின்னம் அருகே இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போக்குவரத்து காவல் துறை இருசக்கர தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டுமக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். முதல்வர் ஜெயலலிதா நினைவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை கடலூர் மாவட்டம் தா.ராஜலட்சுமி, தா.சிவரஞ்சினி ஆகியோருக்கும், சிறந்த மருத்துவர் விருது டாக்டர் எஸ்.சந்திரசேகர் சிறந்த சமூக பணியாளர் ஜெயா கிருஷ்ணசாமி, அதிக வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனமான டெக்ஸ்மோ இன்டஸ்டரீஸ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது சேலம் மத்திய கூட்டுறவு வங்கிக்கும்.

மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய உதகமண்டலம் சமூக சேவை நிறுவனம், சிறந்த சமூக பணியாளர் மகளிர் நலனுக்கான தொண்டாற்றிய டாக்டர் எஸ்.சமயா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago