முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர்அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த உயர்ரக கிரானைட் கற்கள் கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், ஆக. - 16 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உயர்ரக கிரானைட் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளன. தொடர்ந்து அதிரடி சோதனை நடந்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. இது சம்பந்தமாக அரசுக்கு பல புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த புகார்கள் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் அதிக”ரிகள் அடங்கிய 18 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது. மதுரை மாவட்ட த்தில் அரசு அனுமதி பெற்ற 174 கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனடிப் படையில் இந்த குழுவினர் அந்த குவாரிகளுக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக கிரானைட் கற்கள் அதிகமாக உள்ள மேலூர் பகுதிகளில் ஆய்வுகளை துரிதப்படுத்தி உள்ளார். இந்த ஆய்வின் போது அரசு புறம்போக்கு நிலம், கண்மாய், ஊரணி உள்ளிட்டவைகளில் அரசு அனுமதியின்றி தனியார் கிரானைட் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து உள்ளே புகுந்து சட்டவிரோதமாக கிரா னைட் கற்களை வெட்டி எடுத்திருப்பதும், அதனை மண்ணால் மூடி தடயங்களை அழிக்க முயற்சி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவ னங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த கிரானைட் முறை கேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக 36 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இவ்வாறு கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கிரானைட் நிறுவன ங்கள“ன மதுரை பி.ஆர்.பி, ஒலம்பஸ், சிந்து கிரானைட் உட்பட பல்வேறு நிறுவனங்களை ஆய்வு செய்து போலீசார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட அந்த நிறுவனங்களின் அதிபர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பி.ஆர்.பி. நிறுவனமும் சீல் வைக்கப்பட்டது. வழக்குப் பதிவுக்கு ஆளாகி உள்ள குவாரி உரிமையாளர்கள் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அந்த மனு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் போலீசார் குவாரி உரிமையாளர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி பி.ஆர்.பி. நிறுவனர் பழனிச்சாமி, அவரது மகன்கள் சுரேஷ், செந்தில், ஒலம்பஸ் நாகராஜன், சிந்து கிரானைட் செல்வராஜ் உட்பட 6 பேர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சுதந்திர தினமான நேற்றும் 14 வது நாளாக ஆய்வு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதில் கீழையூர் சி.சி. கண்மாய் வட பகுதியில் பிரபல கிரானைட் குவாரிக்கு சொந்தமான இடத்தில் ஏற்றுமதி தரம் கொண்ட உயர்ரக பல வண்ண கற்களை கொண்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வுக்காக அமைக்கப்பட்ட 18 குழுவில் ஒரு குழுவின் தலைவரான மதுரை மாவட்ட துணை கலெக்டர் இளங்கோவன் தலைமையில் உள்ள குழு இதனை கண்டுபிடித்தது.  அவற்றை கணக்கெடுக்கும் பணி நாளை(இன்று, 16ம் தேதி ) தொடங்கும் என்று கூறப்படுகிறது. கலெக்டர் அன்சுல் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்ட போது இ. மலம்பட்டி பகுதியில்  பதுக்கி வைக்கப்பட்ட கிரானைட் கற்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சில தினங்களுக்கு முன்பு கீழையூர் சி.சி.கண்மாய் எதிர்புறம் உள்ள செட்டியார் காட்டு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்கள் கண்டு பிடிக்கப்பட்டு அதனை அளவிடும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்