முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 16 - மதுரையில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கெலெக்டர் அன்சுல்மிஸ்ரா தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த விழாவில் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 242 சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கெளரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மதுரை மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 3 நபர்களுக்கு தலா ரூ.4,300 வீதம் ரூ.12,900 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும், வருவாய்த் துறையின் மூலம் இலசவ வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 79 பயனாளிகளுக்கு ரூ.29.30 இலட்சம் மதிப்பிலும், முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.50,000டி- மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் மூலம் தேசிய வேளாண்மை மற்றும் சிறுதளைகள் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு ரூ.15,200 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் உயர் தொழில்நுட்ப காய்கறி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு ரூ.5950 மதிப்பிலும், விளையாட்டுத்துறையின் மூலம் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 19 நபர்களுக்கு ரூ.99,500 மதிப்பிலும் ஆக மொத்தம் 159 நபர்களுக்கு ரூ.31,13,550 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் தென் மண்டல காவல்துறை தலைவர் ராஜேஸ்தாஸ், தென் மண்டல காவல்துறை துணைத்தலைவர் பாலநாகதேவி மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் சஞ்சய்மாத்தூர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்பாலகிருஷ்ணன், காவல்துணைஆணையர் திருநாவுக்கரசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், உதவி ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) அருண்சுந்தர்தயாளன், பயிற்சி ஆட்சியர் எம்.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பெ.ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) அலிஅக்பர், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் குருமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் நாகராஜமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜாராம், வருவாய் கோட்டாட்சியர் துரைராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சுகுமாறன், மாற்றுத் திறனாளி நல அலுவலர் மதிவாணன், மதுரை தெற்கு வட்டாட்சியர் முருகானந்தம் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை கிழக்கு ஊராட்சி காதக்கிணறு கிராமத்தில் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிதலைவர் ஜெயசீலன் உள்பட கிராமத்தினர் கலந்து கொண்டனர். இதன் பிறகு சுதந்திர தினவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சமபந்தி நடைபெற்றது. இதில் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கலந்து கொண்டு 500 ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். இதில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, துணைமேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், கோவில் தக்கார் கரு.முத்துகண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்