முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தேசியக்கொடி உலக சாதனைக்காக பெரம்பலூர் மாணவர்கள் சாதனை​

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

பெரம்பலூர். ஆக.- 16 - சுதந்திரதினத்தையொட்டி தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பிரமாண்ட தேசியக்கொடி வரைந்து உலக சாதனை படைக்க திட்டமிட்டனர். இதன்படி மாணவ,மாணவிகள் ஆயிரத்து 850 பேர், 79 ஆசிரியர்கள், 6 பணியாளர்கள் உள்பட ஆயிரத்து 944 பேர் இணைந்து 20 ஆயிரத்து 500 கிலோ உப்பு, 4 ஆயிரத்து 500 கிலோ கலர் பொடிகளை கொண்டு பிரமாண்டமான தேசியக்கொடியை வரைந்தனர். இந்த தேசியக்கொடி 45 மீட்டர் nullநீளமும், 30 மீட்டர் ஆகலமும் கொண்ட ஆயிரத்து 350 சதுர மீட்டர்கள், அதாவது 14ஆயிரத்து 532 சதர அடி பரப்பளவில் வரையப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு துவங்கி 10.30 மணிக்குள் அதாவது 3.30 மணி நேரத்தில் வரைந்து முடிக்கப்பட்டது. உலக சாதனை நிறுவனங்கள் இதற்கு 9 மணி நேரம் இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் 3 மணி நேரம் 30 நிமிடத்திலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒரு அமைப்பு இந்த நாட்டின் தேசியக்கொடியை 600 சதுர மீட்டரில் 4 ஆயிரம் நபர்களை கொண்டு வரைந்ததுதான் உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முறியடித்துள்ளனர். இந்த சாதனை நிகழ்ச்சியை லண்டனை சேர்ந்த எலைட் வோர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பை சேர்ந்த கேத்திரின் பொசார்டு, சிங்கப்nullர் ஏசியன் ரெக்கார்ட் அகாடமியை சேர்ந்த மார்கோ கிரப்பேஷியா, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் வாசு ஆகியோர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்வி நிறுவன செயலாளர் nullநீல்ராஜ், இயக்குனர் மணி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி இயக்குனர் வினோத், டீன் ரெங்கநாதன், கண்காணிப்பாளர் nullநீலகண்டன், பள்ளி முதல்வர் கிருஷ்ணசாமி, திருச்சி தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வமணி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் குமார் உட்பட தனலெட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தை சேர்ந்த கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என்று சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்