முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கையில் சுதந்திர தினவிழாவில் ரூ.48 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சிவகங்கை ஆக.- 16 - நாட்டின் 66வது ஆண்டு சுதந்திரதினவிழா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரை மாவட்ட எஸ்.பி பன்னீர்செல்வம் வரவேற்றார். விழாவில் 60 தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். விழாவில் 30 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 11 ஆயிரத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சமுகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள்துறை, முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, மகளிர் திட்டம் வருவாய்துறை உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்க்பட்டது. நிகழ்ச்சியில் விபத்தின் வாகனம் ஓட்டிய சிவகங்கை கால்நடைத்துறை ஓட்டுனர் முரளிதரனுக்கு தங்க பதக்கம், சிறந்த போரூராட்சியாக தேர்வு செய்யப்பட்ட திருப்பத்தூர் பேரூராட்சிக்கு கேடயமும், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் சிறப்பாக பணிபுரந்த 10 மருத்துவர்களுக்கும் 8 சீனியர் செவிளியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  விழாவில் தேவகோட்டை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புதுவயல் வித்யகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை பெத்தாள் ஆட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 360 மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மிகசிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தனபால் , திட்ட அலுவலர் கிரண்குராலா, மாவட்ட தலைமை நீதிபதி மாயாண்டி, நதிபதிகள் குமரேசன், சதீஷ், மாவட்ட கூடுதல் எஸ்.பி கண்ணன், மாவட்ட அ.தி.மு.க செயலாளர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சிவதேவ்குமார், துணைத்தலைவர் சின்னையா அம்பலம், சிவகங்கை நகர் மன்ற தலைவர் அர்ச்சுணன், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வி, பழனியப்பன், அறநிலையத்துறை இணை ஆணையர் முனைவர் தனபால், வேளாண்மை இணை இயக்குனர் செல்லத்துரை, கோட்டாட்சியர் துர்காமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கண்ணதாசன், உதவி அலுவலர் பாண்டி, வட்டாட்சியர்கள் பிரேம்குமார், செல்வநாதன் , முருகானந்தம் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்