முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் மீது முதல்வர் மேலும் ஒரு அவதூறு வழக்கு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.17 - தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது, முதல்வர் ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, ஞாயிற்றுக் கிழமைகளிலும் அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்கட்சிகளின் செய்திகளை, பேச்சுகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது வழக்கு. வார கணக்கில், மாத கணக்கில் முதலமைச்சர் ஓய்வு எடுத்தால் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் அதை பற்றி பேச கூடாதா. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையா நீடிக்கிறது. ஜெயலலிதா வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று கூறப்பட்டுள்ளது. அம்மையார், கடந்த ஒன்றரை மாதமாக ஆற்றிய பணிகள் என்ன? ஒரு முதல்வர் ஓய்வு என்றால், கோட நாட்டில் ஒரு சில நாட்கள் இருக்கலாம். அன்றாடம் அறிக்கை ஒன்று முதல்வர் பெயரில் வந்ததை தவிர வேறு என்ன பணி முறையாக நடைபெறுகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கை, வேண்டும் என்றே உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதை முரசொலி நாளிதழிலும் எந்த விளக்கமும் கேட்காமல், பத்திரிகை ஆசிரியர் செல்வம் வெளியிட்டுள்ளார்.

முதல்வர் கோட நாட்டில் இருந்தாலும் அரசு பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். அரசு ஆவணங்களை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளார். அப்படிப்பட்ட முதல்வர் மீது அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்ட முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் மற்றும் அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்திய தண்டனை சட்டம் 500, 501-ன் கீழ் குற்றம் புரிந்தவர்கள். எனவே, அவர்கள் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறுப்பட்டுள்ளது. முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கலையரசன் முன்னிலையில் விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்