முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் வாழும்பிற மாநிலமக்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்படத்தேவையில்லை

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 18 - தமிழ்நாட்டில் வாழும் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்த மக்களும், தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்படத்தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இனக்கலவரம் நடந்து வருகிறது. இதற்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்த 3 மாவட்டங்களிலும் போடோ பழங்குடியினர் அதிகமாக வசித்து வருகின்றனர். அதே மாவட்டங்களில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் அதிக அளவில் உள்ளனர். இந்த இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இங்குள்ள சிறுபான்மையினத்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறுபான்மையினர்களுக்கு ஆதரவாக இதர மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, மகாராஷ்ட்ரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மும்பையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரிலும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் கடத்தப்பட்டதாக ஒரு சில விஷமிகள் வதந்திகளை பரப்பி விட்டனர். இதனையொட்டி பெங்களூர், மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டியிருக்கிறார்கள். பிழைப்புக்காகவும் படிப்பு மற்றும் இதர தொழில்களுக்காகவும் வந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள் பெரும் அச்சத்துடன் இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதற்கு அந்த மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை சந்தித்து முறையிட்டனர். இதர மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். இதனையொட்டி வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கும் படி வதந்திகளை பரபரப்ப வேண்டாம் என்றும் விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கும் எச்சரித்துள்ளார். இருப்பினும் அசாம் மாநிலத்தில் இன்னும் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவம் நடந்து வருகிறது. இதனால் பிற மாநிலங்களில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.தமிழகத்தில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்படும். அவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அசாமில் அண்மையில், நிகழ்ந்த சம்பங்கள் காரணமாக சென்னையில் வாழும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்துள்ளதாக என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கவலைப்பட தேவையில்லை என்று நான் உறுதியாக கூறவிரும்புகிறேன். அவர்களுடைய பாதுகாப்பு குறித்து காவல் துறை சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு எப்போதுமே, அமைதி நிலவும் மாநிலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் வாழும் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்த மக்களும், எந்த தொல்லையையும் சந்திக்க வேண்டியிருக்காது என்று என்னுடைய அரசு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago