முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் ஒலிம்பிக்கிற்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதே சானியா மிர்சாவின் அடுத்தஇலக்கு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஆக. - 18 - லண்டன் ஒலிம்பிக்கிற்கு பிறகு, கிரா ண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதே நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானி யா மிர்சாவின் அடுத்த இலக்காக உள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற சானியாவின் கனவு நிறை வேறவில்லை. இருந்த போதிலும், தொடர்ந்து கடும் பயிற்சிகளை மேற்கொண்டு தனது ஓய்வுக்கு முன்னதாக மேலும் சில கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல அவர் விருப்பம் கொண்டு இரு க்கிறார். சானியாவின் டென்னிஸ் வாழ்க்கையி ல் ஒலிம்பிக்கிற்குப் பிறகு அவர் சில முடிவுகளை எடுத்து இருக்கிறார். அதா வது டென்னிசில் தனி நபர் பிரிவில் ஆடமாட்டார். இரட்டையர் போட்டி யில் மட்டும் பங்கேற்க இருக்கிறார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் பங்கேற்பாரா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. ஏனெனில் பார்ட்னர்ஷிப் பிரச்சினைக்குப் பிறகு, அவர் மீண்டும் பூபதியை சந்தித்து இதுவரை பேசவில்லை.  அமெரிக்க ஓபன் போட்டி துவங்க இன் னும் சில தினங்களே உள்ளன. இந்நி லையில், சானியாவும், மகேசும் மீண்டும் சந்தித்து பேசுவார்களா என்பது தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் யாருக்கு யார் ஜோடி என்பது குறித்து பிரச்சினை எழுந்தது. இதனால் பூபதி மற்றும் சானியா வுக்கு இடையே இருந்த பிரண்ட்ஷிப் முறிந்தது. தவிர, இரட்டையர் பிரிவில் டாப் - 10 இடத்தை கைப்பற்ற வேண்டும் என்பது ம், தனி நபரில் தனது முந்தைய சாத னையைான 7-ம் இடத்தை தாண்ட வே ண்டும் என்பதும் அவரது அடுத்த கட்ட விருப்பமாகும். லண்டன் ஒலிம்பிக் குறித்து சானியாவி டம் கேட்ட போது, நாங்கள் காலிறுதி யில் நன்கு ஆடிய போதி லும், தோல் வி அடைந்தோம். இது வருத்தம் அளித் தது என்றார் அவர். 

கிராண்ட் ஸ்லாம் அல்லது முக்கிய போட்டிகளில் முதல் சுற்றில் அல்லது கடைசி சுற்றில் தோல்வி அடைவது ஏமாற்றம் அளிக்கும். இருந்த போதிலு ம் விளையாட்டு வீரர்களாகிய நாங்கல் கடந்ததை மறந்து அடுத்த சவாலுக்கு தயாராவோம் என்றும் அவர் கூறினார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி, ஆப்ரிக்க - ஆசிய விளையா  ட்டு என முக்கிய போட்டிகளில் பதக் கம் பெற்றாலும், ஒலிம்பிக்கில் பதக்க ம் பெறாவிட்டால், ஆசை நிறைவேறாது என்றும் சானியா கூறினார். ஒலிம்பிக்கில் நான் பங்கேற்காமல் போயிருந்தால் எனது ஆசை நிறை வேறி இருக்காது. உலகின் சிறந்த வீரர் கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற் கும் இந்த விளையாட்டு திருவிழாவில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது என்றும் சானியா தெரிவித்தார். டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முடிசூ டா மன்னனாகத் திகழும் ரோஜர் பெட ரர் இதுவரை ஒலிம்பிக்கில் தங்கம் வெ ல்லவில்லை. அதே போல இதற்கு மு ன்பு கொடி கட்டிப் பறந்த பீட் சாம்ப் ராஸ் கூட தங்கம் வெல்ல வில்லை என்றும் மிர்சா கூறினார். ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்காவிட்டால் கூட கிராண்ட் ஸ்லாம் போட்டி கள் டென்னிஸ் வீரர்கள் தங்களது திற மையை வெளிப்படுத்த நல்ல பிளாட்பார்மாக உள்ளது என்றும் சானியா தெ ரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago