முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பான் மசாலாவுக்கு தடை விதிக்க தமிழகஅரசு முடிவு?

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 20 - பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பாக்குகளுக்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணிச் செயலாளருமான அன்புமணி எழுதிய கடிதத்துக்கு தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை அனுப்பியுள்ள பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை  வருமாறு:- புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமான குட்கா போன்ற போதைப் பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மே 31 மற்றும் ஜூலை 16-​ம் தேதிகளில் கடிதம் எழுதியிருந்தேன். தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவை தடை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவற்றைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநரிடமிருந்து எனக்கு கடந்த ஜூலை 30-​ம் தேதி பதில் கடிதம் வந்துள்ளது. வாய்ப் புற்றுநோயின் தலைநகராக சென்னை உருவெடுத்துள்ள நிலையில், குட்கா மற்றும் போதைப் பாக்குகளின் தீமையை உணர்ந்து தமிழக அரசு அவற்றுக்கு உடனடியாகத் தடை விதிக்க முதல்வர் ஜெயலலிதா ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்