முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தின்றி ஓட்டும்ஆட்டோ டிரைவர்களுக்கு பாராட்டு சான்றுவழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 20 - விபத்தின்றி ஓட்டும் ஆட்டோ டிரைவர்களுக்கு பாராட்டு சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்தார். மதுரை மாநகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கலந்து கொணடு பேசியதாவது, ஓட்டுனர்களின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மதுரை மாநகர் முழுவதும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கிலும், ஓட்டுனர்களினால் பயனிகளுக்கும், பாதசாரிகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஆட்டோக்களின் பின்புறம் ஆட்கள் வருகிறார்களா, வாகனம் வருகிறதா என்பதை தெரிந்து கொள்கின்ற வகையில் ஓட்டுனர்களின் வலது மற்றும் இடது புறங்களில் கண்ணாடி வைத்திருக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களாகிய உங்களை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. மாறாக வாகனத்தை ஓட்டும் போது எப்படி எல்லாம் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை உங்களுக்கு விளக்குவதற்காகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. சாலை விதிகளை பின்பற்றி விபத்தின்றி வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல் துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு, மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் மகுடபதி, தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் எல்லப்பராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கல்யாணசுந்தரம், ரவிச்சந்திரன், தமிழ்நாடு வர்த்தக சங்க செயலாளர் ராஜமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago