முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட்lஅதிபர் lபி.ஆர்.பி. மதுரை lமத்திய சிறையில் அடைப்பு

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.- 20 - கிரானைட் முறைகேடு வழக்கில் கைது செய்யப் பட்ட கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. நேற்று இரவு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதி களில் கடந்த திமுக ஆட்சியின் போது சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது சம்பந்தமாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா  மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை 18 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தார். அவரும் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், கால்வாய்கள், வாய்க்கால் புறம்போக்குகள் உள்ளிட்ட பல்வேறு அரசுக்கு சொந்தமான இடங்களை தனியார் கிரானைட் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இந்த குழுவினர் கடந்த 2ம் தேதி முதல் கிரானைட் குவாரிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு விதிமீறல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்கள் மற்றும் கிரானைட் அதிபர்கள் மீது 13 வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர கிரானைட் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கிரானைட் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் கிரானைட் முறைகேட்டில் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிக அளவில் ஈடுபட்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலூர் தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ் போர்ட்ஸ் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அன் சுல்மிஸ்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக சோதனை நடத்தி  அலுவலகம், தொழிற் சாலைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பிஆர்பி நிறுவனத்தின் மூலம் இயங்கி வந்த 2 பஸ்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அந்த 2 பஸ்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான  லாரிகள் மற்றும் பல வாகனங்களின் உரிமங்கள் முடக்கப்பட்டது. இதற்கிடையில் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த பிஆர்பி நிறுவன அதிபர் பி.பழனிச்சாமி, அவரது மகன்கள் மற்றும் சிந்து கிரானைட் அதிபர் பி.கே.செல்வராஜ், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநர்கள் நாகராஜ், மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 13 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்க ப்பட்டு, வருகிற 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் அதிபர் பி.பழனிச்சாமி நேற்று முன்தினம் மதியம் 12.50 மணியளவில் வழக்கறிஞர்கள் பால்கனகராஜ், பீட்டர் ரமேஷ், சங்கர நாராயணன் ஆகியோருடன் ஒரு காரில் மதுரை சர்வேயர் காலனி யில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு மனுவுடன் வந்தார். பின்னர் காரை விட்டு இறங்கி தனது வழக்கறிஞர்கள் புடை சூழ சூப்பிரெண்டு அலுவலகத்திற்குள் பி.பழனிச்சாமி சென்றார். அப்போது அங்கிருந்த ஏடிஎஸ்பி மயில்வாகனனிடம் மனுவை கொடுத்து போலீசில் சரண் அடைந்தார். அப் போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் வெளியே சென்றிரு ந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பி.பழனிச்சாமி போலீஸ் எஸ்பியிடம் மனு ஒன்று கொடுத்தார். தான் போலீசில் சரண் அடைவதாக தெரிவித்தார். பின்னர் போலீசில் சரண் அடைந்த கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமியிடம் எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பகல் 1.30 மணியளவில் பி.பழனிச் சாமியை போலீசார் வேனில் ஏற்றி சென்று வேறு ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தினர்.

போலீசில் சரணடைந்த பி.பழனிச்சாமி போலீசார் விசாரணை நடத்திய பின்னர் நேற்றுமுன்தினம் இரவு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பி.பழனிச்சாமியை போலீசார் நேற்று இரவு தபால் தந்திநகர் மெயின் ரோட்டில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கண்ணன் வீட்டிற்கு கொண்டு வந்து அவர் முன்னிலையில் கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமியை போலீசார் ஆஜர்படுத் தினர். பழனிச்சாமியை வருகின்ற 31.8.2012-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி கண்ணன் உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமி போலீஸ் வேனில் ஏற்றப் பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவரப் பட்டு அடைக்கப்பட்டார். முன்னதாக நீதிபதி கண்ணனிடம் பி.ஆர்.பி. சார்பாக ஆஜரான வீரகதிரவன் கொடுத்த ஜாமீன் மனுவையும் நீதிபதி கண்ணன் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்