முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

வேதாரண்யம் ஆக 21 - வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை  இலங்கை ராணுவத்தினர் தாக்கி காயப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,இதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும் இராண்டாவது நாளாக கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ்டுபட்டனர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவி கிராம  மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கோடியக்கரை நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர் மேலும் அவர்கள் படகுகளை சேதப்படுத்தியதுடன்  ஐஸ்பெட்டிகள், செல்போன், மீன்கள், திசைக்காட்டும் கருவி, மற்றும் டீசல் ஆகியவற்றை கடலி;;;ல் கொட்டி அட்டுழியம் செய்து விட்டு சென்று விட்டனர்

இந்த  சம்பவத்தில் காயமடைந்த வெள்ளப்பள்ளம்  கிராமத்தைச் சேர்ந்;த மூர்த்தி என்கிற குப்புசாமி (35) அன்புசெல்வன் (19) மகாலிங்கம் (25) முருகையன் (50), அப்புராஜ் (45) பொன்னுசாமி (45) சத்தியமூர்த்தி (37), இளையராஜா(20) ஆகிய 8 மீனவர்கள்; நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்;சைப் பெற்று வருகின்றனர். காயமடைந்த மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்

இந்த நிலையில் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்;பு தெரிவித்தும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும்  வெள்ளப்பள்ளம் மற்றும் வானவன்மகாதேவி ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த சுமார் 1500 பேர் கடலுக்கு செல்லாமல் இராண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ்டுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago