முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக் கட்டிடம்: முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்,ஆக.21 - திருமங்கலம் அருகே உள்ள அனுப்பம்பட்டியில் ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்களை மதுரை புறந்கர் மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். 

திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ முயற்சியின் பலனாக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சார்பில் ரூ.10 லட்சம் செலவில் அனுப்பபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் புதிய இரு வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையேற்று திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் 

கிராமங்களை நகரங்களுக்கு இணையாக உயர்த்திடவும் உழைத்து வாழும் மக்களுக்கு உயர்வு அளித்திடவும் பல சிறப்பான திட்டங்களை தமிழக முதல்வர் செய்து வருகிறார். இதில் குறிப்பாக கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிவருகிறார். மாணவர்களுக்கு காலணி முதல் கம்யூட்டர் வரைஅனைத்து அத்யாவசிய பொருட்களையும் விலையில்லா பொருட்களாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஊராட்சி பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்து தர முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். திருமங்கலம் தொகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரின் உத்தரவால் துவங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிட வசதி இல்லாத பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட உத்தரவு இட்டுள்ளார். இதற்கு தேவையான நிதியையும், தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தையும் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. இவற்றையெல்லாம் மீறி தமிழக மக்களுக்கு முதல்வர் தினம்தினம் நல்ல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். 

இவ் விழாவில் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, யூனியன்துணை சேர்மன் பசுபதி ஆண்டிச்சாமி, ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சிவா, ஊராட்சி மன்ற தலைவர் மொக்கராஜ், அனுப்பபட்டி கிளைசெயலாளர் குபேந்திரன், தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் கல்வி அலுவலர்கள் கட்சிநிர்வாகிகள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்