முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவாரிகளில் கற்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், ஆக.22 - மேலூர் பகுதி கிரானைட் குவாரிகளில் 15 ஆயித்திற்கும் மேற்பட்ட கற்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள  இடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள்  வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள்  எழுந்ததன் அடிப்படையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அதிகாரிகளை உள்ளடக்கிய 18 குழக்கள் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் மேலூர் பகுதியில் கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம், திருவாதவூர், இடையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

20-வது நாளாக கீழவளவு, கீழையூர், ரெங்காசாமிபுரம், திருவாதவூர், இடைப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுரை மாவட்ட துணை கலெக்டர் இளங்கோவன் (முத்திரைத்தாள்), தனி ஆட்சியர் குணசேகரன், துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெய்சிங் ஞானதுரை ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு மேலூரை அடுத்த கீழவளவு பகுதியில் சின்ன இலந்தைகுளம், பெரிய இலந்தைகுளம் மற்றும் சர்க்கரை பீர்மலை அருகே உள்ள குவாரி பகுதி அகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரு வேறு இடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட உயர்தர கிரானைட் கற்கள் பதுக்கிவைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.

பிடிப்பட்ட கற்களை அளவிடும் பணிக்காக இரண்டு வி.ஏ.ஓ மற்றும் இரண்டு தலையாரி கொண்ட 31 பேர் குழுக்கள் அமைக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கணக்கிடும் பணியில் அவர்கள் ஈடுபட்டதில் நேற்று வரை 20 ஆயிரத்து 700 கற்கள் மட்டுமே அளவீடு செய்துள்ளனராம். மீதமுள்ள கற்களை கணக்கிடும் பணி இன்னும் பல வாரங்கள் பிடிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சின்ன இலந்தைகுளம் பகுதியில் பிடிப்பட்ட கற்களின் நடுவே பி.ஆர்.பி நிறுவனத்திற்கு சொந்தமான 25 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகளின் சோதனையில் கண்டறியப்பட்டது. மேலூர் மோட்டார் வாகன கார்திகேயன் தலைமையில் குழு அந்த வாகனங்களை தணிக்கை செய்து அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago