முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் 16 பேர் 12 மணி நேரத்திற்கு பிறகு விடுதலை

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், ஆக. 22 - நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர், 12 மணி நேரத்திற்கு பிறகு அவர்களை விடுதலை செய்தனர்.  ராமேசுவரம் கடற்கரையில் இருந்து கடந்த 20 ம் தேதி சுமார் 630 விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றது. இப்படகுகள் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் மூன்று போர்க் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

பின்னர் அன்றிரவு தங்கச்சிமடத்தை சேர்ந்த தேவசகாயம், செருசன், அந்தோணி பிச்சை ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப் படகுகளையும், படகில் இருந்த மீனவர்கள் தவமணி, செல்வம், தங்கவேல், கோபி, மாயி, கிறிஸ்டோபர், அடிமை, பிரேமதி, கிளமோன், பிரபா, ராபிஸ்டன், செருசன், கிராபின், அண்டன், சாப்ளின், அந்தோணி ஆகிய 16 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இரவோடு இரவாக நெடுந்தீவு கடற்கரைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் இரவு முழுவதும் ராமேஸ்வரம் மீனவர்களிடம்  சிங்கள கடற்படையினர் விசாரனை நடத்தி விட்டு, நேற்று காலை 10 மணியளவில் 3 படகுகளையும், 16 மீனவர்களையும் விடுதலை செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களும் 12 மணி நேரத்திற்கு பிறகு 3 படகுகளுடன் 16 மீனவர்களும் நேற்று மதியம் 2 மணிக்கு ராமேசுவரத்திற்கு திரும்பினர்.  இது குறித்து கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கடந்த 20 ம் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 படகையும் 16 பேரையும் சிறைபிடித்து நெடுந்தீவு முகாமிற்கு கொண்டு சென்றனர். எங்களிடம் கடற்படையினர் பல்வேறு கட்டமாக விசாரனை நடத்தி விட்டு எங்களிடம் இருந்த 4 செல்போன்கள் மற்றும் படகில் இருந்த மீன்களை பறித்து கொண்டனர். பின்னர் 12 மணி நேரம் கழித்து நேற்று காலை 10 மணிக்கு எங்களை விடுதலை செய்தனர் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago