முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் - திரை விமர்சனம்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக,22 - ராமநாதபுரத்தில் வசித்து வரும் நாயகன் விஜய்ஆண்டனி. சின்ன வயதில் தாய் செய்யும் தவறான நடத்தையால் கோபமடைந்து வீட்டை கொளுத்துகிறார். இதில் இரண்டு உயிர்கள் கருகுகிறது. கொலைகாரன் என்ற பட்டத்துடன் சென்னை வருகிறார். வரும்போது பேருந்து விபத்துக்குள்ளாகிறது. அதில் மருத்துவக் கல்லூரி மாணவன் முகமது சலீம் இறந்து போகிறார். அவனின் சான்றிதழை தனதாக்கிக்கொண்டு சலீம் என்ற பெயரில் மருத்துவப் படிப்பு படிக்கிறான். இதற்கு பல தடைகள் ஏற்படுகிறது. அந்த தடைகளை உடைத்து தனது லட்சியத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்.

பணம் உடையவர்கள்தான் உயர்படிப்பு படிக்க முடியுமா, பாமரனும் லட்சியம் இருந்தால் முடியும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர் ஜீவாசங்கரை பாராட்டலாம். தொடக்கம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் காட்சிகள் அமைத்திருப்பது சிறப்பு. த்ரிலர் கதைக்கு மிகவும் பொருந்தியிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. கொலை செய்யும்போதும், சடலத்தை குழிதோண்டி புதைக்கும்போதும், போலீஸ் விசாரிக்கும் போதும் படம் பார்ப்பவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் நடித்து அசத்தியிருக்கிறார் ஆண்டனி. 

இவருடன் நாயகி ரூபா மஞ்சரி, அனுயா, விபா, சித்தார்த் என அனைவரும் அற்புதமாக நடித்து உள்ளனர். படத்துக்கு மிகப்பெரிய பலம் ஆண்டனியின் பின்னணி இசை. பாடல்கள் அனைத்தும் மறுபடியும் கேட்க தூண்டும் ரகம். சூர்யாவின் படத்தொகுப்பு கோர்வை. வசனம் நீலன் கே.சேகர். நச் சண்டை ராஜசேகர். எதார்த்தம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஜீவாசங்கர். வெற்றி பட இயக்குனர்கள் வரிசையில் இவருக்கும் இடம் உண்டு. மிரள வைக்காமல் மிரள வைக்கும் படம் நான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்