முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகதிகள் முகாம் முற்றுகை போராட்டம்: வைகோ கைது

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 22 - ந்தமல்லி கரையான் சாவடியில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு செந்தூரன், தர்கர், பகீரதன், பிரதீபன், பரமேஸ்வரன், கங்காதரன், ஜெயமோகன், சந்திரகுமார் ஆகிய 8 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மற்றும் ந்தமல்லி முகாம் உள்பட அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரி ந்தமல்லி முகாமில் செந்தூரன் கடந்த 6-​ந்தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

அவரது உயிரை காப்பாற்றக்கோரியும், முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் ம.தி.மு.க. சார்பில் நேற்று காலை முற்றுகை போராட்டம்  நடந்தது. ம.தி.மு.க.  பொதுச் செயலாளர்  வைகோ இதில் கலந்து கொள்வதற்காக குமணன் சாவடி வந்தார். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேவை கண்டித்தும், அகதிகள் முகாமை மூட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். 

தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசினார். அவர் கூறியதாவது:​ ந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரை  காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜூன் மாதம் 18-​ந்தேதி உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு 2 மாதம் ஜெயிலில் இருந்தார். அவர் மீது ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றதாக அங்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் அங்குள்ள கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. ஆனால் தமிழக போலீசார் செந்தூரனை கேரள போலீசார் உதவியுடன் கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தது. அங்கு அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகளும், கியூ பிரிவு போலீசாரும் உத்தரவாதம் அளித்ததால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். ஆனால் சொன்னபடி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை. இதற்கிடையே செந்தூரன் உள்பட 5 பேரை ந்தமல்லி முகாமுக்கு மாற்றி விட்டனர். இங்கு அவர் 6-​ந்தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும், அகதி முகாம்களை மூட வேண்டும். இதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர் ந்தமல்லி முகாம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக வைகோ  தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். அவர் மேடையில் இருந்து இறங்கியதும் அங்கு தயாராக இருந்த போலீசார் வைகோவையும், நிர்வாகிகளையும் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த போராட்டத்தில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், இளைஞர் அணி துணை செயலாளர் வை கந்தன், நகர செயலாளர் சங்கர் உள்பட 500-​க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இதற்கிடையே வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து தொண்டர்கள் ந்தமல்லி-​ ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.போலீசார் அவற்றை வேறு பாதையில் திருப்பி விட்டனர். மறியலின்போது ந்தமல்லி புதுச்சத்திரத்தைச் சேர்ந்த ம.தி.மு.க. கிளை செயலாளர் செல்லக்கனி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் காப்பாற்றி கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்