முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டிட விபத்து வழக்கு: ஜேப்பியாருக்கு இடைக்கால ஜாமீன்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 22 -​ கட்டிட விபத்து வழக்கில் ஜேப்பியாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.  சுங்குவார்சத்திரம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பொறியியல் கல்லூரியின் விளையாட்டரங்கம் கடந்த 6-​ம்தேதி இடிந்து விழுந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கல்லூரியின் தலைவர் ஜேப்பியார் மற்றும் தாளாளர் மரியவில்சன் ஆகியோரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜேப்பியார் தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேப்பியார் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற இருப்பதாகவும், அதற்காக ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் அவர் தரப்பு வக்கீல் வாதாடினார். அரசு தரப்பில்  தலைமை அரசு வழக்கறிஞர் நவதகிருஷ்ணன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஜேப்பியாரின் உடல்நிலையை கருதி, வருகிற 31-ம்தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். மேலும் அவரை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும், கோர்ட் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அவரை அங்கிருந்து மாற்றக்கூடாது என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2.5 லட்சம் வீதம் ஸ்ரீபெரும்புதூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன் மனு மீதான விசாரணை 31-​ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்