முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் வருகை: கால்கோள் விழா கோலாகலமாக நடந்தது

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

ஸ்ரீரங்கம், ஆக.23 - முதல்வர் ஜெயலலிதா திருச்சி வருகையை முன்னிட்டு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக திருவரங்கத்தில் நேற்று கால்கோள் விழா கோலாகலமாக நடந்தது. இதில் கலெக்டர், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகிற 3ந்தேதி ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ளார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திருவரங்கம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பல கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். 

முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்வது குறித்து கடந்த திங்களன்று(20ந்தேதி) அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, என்.ஆர்.சிவபதி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ, பரஞ்சோதி எம்.எல்.ஏ, ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதன்படி தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி சந்திக்கும் இடத்தில் மேடை போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.45 மணிக்கு மந்திரங்கள் முழங்க கால்கோள் விழா நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ, மு.பரஞ்சோதி எம்.எல்.ஏ, டி.பி.னாட்சி எம்.எல்.ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆ.முருகையன், கே.சி.பரமசிவம், மேயர் அ.ஜெயா, துணை மேயர் ஆசிக் மீரா, கோட்டத்தலைவர்கள் லதா, மனோகரன், சீனிவாசன், ஞானசேகரன், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி ஜி.சண்முகம், டைமண்ட் திருப்பதி, முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ஏர்போர்ட் விஜி, முத்துலெட்சுமி, தமிழரசி சுப்பையா, அருள்ஜோதி, மாவட்ட அவைத்தலைவர் வெல்லமண்டி நடராஜன்.

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.பத்மநாதன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, மிட்டாய் முருகன், எஸ்.கனகராஜ், ராஜ்மோகன், கேசவன், பாக செயலாளர் எஸ்.என்.சத்தியமூர்த்தி, வி.என்.ஆர்.செல்வம், வட்ட செயலாளர் திருவேங்கடம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு (2011) ஜூன்19ந்தேதி மற்றும் 20ந்தேதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் மேலசித்திரை வீதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். பின்னர் கடந்த (2012) பிப்ரவரி மாதம் 13ந்தேதி திருவானைக்காவல் வடக்கு உள்வீதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். தற்போது 3வது முறையாக வருகிற செப்.3 ந்தேதி தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருகை தந்து அரசு விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதையொட்டி அதிமுகவின் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago