முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் முன்னாள் படைவீரர் கட்டடம் புதுப்பிக்க நிதிஒதுக்கீடு

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.23 - வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் மைய கட்டடத்தை சீரமைத்து புதுப்பிக்க ரூ.2.19 கோடி நிதிஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறபித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தனது  உயிரினை துச்சமென மதித்து, தான் பிறந்த நாட்டினை பாதுகாப்பதே தனது உயிர்மூச்சு என்று கருதி, குடும்ப நலனை மறந்து, நாட்டின் நலனை முன்னிறுத்தி, நாட்டின் பாதுகாப்பு என்ற உயரியப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அல்லும் பகலும் அயராது பணியாற்றி ஓய்வுப் பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு, மாவட்டந்தோறும் முன்னாள் படைவீரர் மையங்கள்  செயல்பட்டு வருகின்றன. 

முன்னாள் படைவீரர்கள் நலன்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வரும்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,   வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மையக் கட்டடம் மிகவும் சேதமடைந்து பழுது பார்க்க இயலாத நிலைமையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அதனை இடித்து விட்டு, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய  புதிய கட்டடம் கட்ட உத்தரவிட்டுள்ளார்.

இந்த பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு, 2 கோடியே 19 லட்சத்து 65 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பீட்டில்  அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கை, இம்மையத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.  

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்