முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோவில் 100-வது ஏவுகணை தயாராகிறது...!

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.23 - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் 100வது ஏவுகணையை செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. இரண்டு வெளிநாட்டு செயற்கைகோள்களை தாங்கியபடி செப்டம்பர் மாதம் விண்ணில் பறக்க பி.எஸ்.எல்.வி.ஜி.-​21 என்ற ஏவுகணை தயாராகி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 2​வது வாரத்தில் பி.எஸ்.எல்.வி. ஜி-21 என்ற புதிய ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இது இந்தியாவின் 100​வது ராக்கெட் ஆகும்.

இதில் ஜப்பான், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்களும் சேர்த்து ஏவப்பட உள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இது முக்கிய மைல் கல்லாக அமையும். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த பணிகளில் விஞ்ஞானிகள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago