முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜர்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.23 - தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜராகிறார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமருக்குக் கடந்த 24.12.2006​ஆம் தேதியன்று, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி,  ம.தி.மு.க.வை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் உடைக்க முயற்சிக்கின்றார் என்று கடிதம் எழுதினார். அந்தச் செய்தி 25.12.2006 தேதியிட்ட ஒரு ஆங்கில நாளிதழில் வெளியானது.

அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த  கருணாநிதியை அவமதிப்பு செய்யும் விதத்தில் அச்செய்தி இருந்ததாக தமிழக அரசு 28.12.2006​ஆம் தேதி  வைகோ  மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர பணித்தது. தமிழக அரசின் சென்னை நகர குற்றவியல் வழக்கறிஞர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500​இன்கீழ் வைகோவிற்கு தண்டனை வழங்க வேண்டுமென்று கூறி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்குக்காக 15.02.2007 அன்று வைகோ நேரில் ஆஜரானார். அன்று முதல் தமிழக அரசின் சார்பில் சாட்சியங்கள் யாரும் ஆஜர்படுத்தப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வந்தது.

இந்நிலையில் கடந்த விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் அசோகன், தான் அடுத்த வாய்தாவில் சாட்சிகளை ஆஜர்படுத்தி விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, சென்னை ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழக்கை இன்று (23.08.2012)​ ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் விசாரணையின்போது நேரில் ஆஜராவதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு வைகோ இன்று காலை 10.30 மணிக்கு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago