முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

450 லேப்-டாப்களை திருடிய பிரபல திருடன் பிடிபட்டான்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.23 - சென்னையில் பல்வேறு பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்புள்ள 450 லேப்-டாப் கம்ப்யூட்டர்களை திருடி வந்த பிரபல லேப்-டாப் திருடனை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் ராஜீவ்காந்தி சாலையில் நேற்று கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் கருப்பு ஹெல்மெட் அணிந்த ஆசாமி ஒருவர் அங்கிருந்த பெட்ரோல் பங்கிற்கு வந்தார். தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பினார். ஊழியர்கள் பணம் கேட்ட போது தர மறுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, அங்கு திரண்ட ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டினார். இதனையடுத்து, ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற அந்த ஆசாமியை செம்மஞ்சேரி ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் தண்டயார்பேட்டை வ.உ.சி நகரைச் சேர்ந்த ஜீவா மகன் பாலாஜி ( 25) என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் நடத்திய விசாரணையில்  பாலாஜி தனது கூட்டாளிகளோடு சேர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருமணம் ஆகாமல் தனியாக அறை பிடித்து தங்கியிருக்கும் மென்பொருள் என்ஜினீயர்களை குறி வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதில் அதுபோன்ற வாலிபர்களின் அறைகளுக்கு செல்வதற்கு கருப்பு நிற மோட்டார் சைக்கிள், கருப்பு நிற ஹெல்மெட் கருப்பு உடை அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும், தனது கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டு  அதுபோன்ற அறைகளுக்கு ஏ.சி. மெக்கானிக் போன்ற தோற்றத்தோடு செல்வர். அங்கு அறையில் தங்கியிருப்பவர்களிடம் ஏ.சி.யை அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பார்வையிட வந்தது போல் நடிப்பர். இதில் நைசாக அவர்களிடம் இருந்து லேப்-டாப்களை இருந்து லேப்-டாப்களை குறிவைத்து திருடியுள்ளனர். இவ்வாறு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்புள்ள 450 லேப்-டாப்களை திருடியிருப்பது தெரியவந்தது. 

ஏற்கனவே, இது தொடர்பாக இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் அடையாறு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் முகமது அஸ்லாம், செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் கர்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், சசிதரன், ஏட்டுகள் ரிஷிகுமர், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இதுபோல் லேப்டாப் திருடர்களை வலைவீசி தேடி வந்தனர். சுமார் 4 ஆண்டுகளாக போலீசார் கண்ணில் மண்ணை தூவி டிமிக்கி கொடுத்து வந்தனர். இவ்வாறு திருடப்பட்ட லேப்-டாப்களை குறிப்பிட்ட கும்பல்களின் வலை பின்னலோடு பர்மாபஜார் போன்ற இடங்களில் விற்பனை செய்வர். அதனை கொண்டு தனது நண்பர்களோடு குடி, கூத்து, உல்லாசம் என இருந்து வந்ததும் எனதும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல் விற்பனை செய்யப்பட்ட 5  லேப்-டாப்களையும், இது போல் லேப்-டாப்களை விற்று வாங்கிய நகையான 2 பவுன் நகையை அடகு கடை ஒன்றில் இருந்தும்  மீட்டனர். மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த லேப்-டாப் திருட்டு கும்பலில் தொடர்புடைய பாலாஜியின் கூட்டாளிகளையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago