முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் கலாச்சாரம் குறித்து அமெரிக்க மாணவி ஆய்வு

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

மானாமதுரை ஆக - 29 - தமிழக கலாச்சாரம் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த கலிபோர்னியா வில் வசித்து வருபவர். எல்லினார் ஏ. பவர் அங்குள்ள ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டியில் மானுடவியல் படித்து வருகிறார். மதுரை அமெரிக்கன் கல்லுட்ரியில் மானுடவியல் ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்தார். தமிழக கிராமப்புற கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை தாலுகா மேலப்பசளை கிராமத்தில் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார் இவரது தோழியான அஸ்வினியின் வீடு மேலப்பசளையில் உள்ளது. இங்கு தங்கி கிராமப்புறங்களில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை தினசரி பதிவு செய்து கொள்கிறார். கிராமப்புறங்களில் கூலி வேலைக்கு செல்பவர்களின் தினசரி வாழ்க்கை, உணவு பழக்க வழக்கம், பொழுது போக்கு, சேமிப்பு, குடும்ப வாழ்க்கை ஆகியவை பற்றிய பதிவுகளை மேற்கொள்கிறார். கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்கள், விவசாய பணிகள் ஆகியவை பற்றியும் கேட்டறிகிறார். தமிழக மக்களுடன் நன்றாக பேசிப்பழக வேண்டும் என்பதற்காக தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றியும், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையையும் அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையையும் ஒப்பீடு செய்து வருகிறார். தமிழக மக்கள் தெரிந்தவர், தெரியாதவர் என யார் வந்தாலும் நன்றாக உபசரிக்கின்றனர் என்கிறார் எலினா. இதுகுறித்து அவர் பேசும் போது தமிழ் கலாச்சாரம் பற்றிய ஆய்வுக்காக தமிழகம் வந்துள்ளேன். கிராமப்புற மக்களின் வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. தினசரி யாரை பார்த்தாலும் நலம் விசாரிக்கின்றனர். இங்குள்ள மக்களுடன் பேசுவதற்காக தமிழ் கற்றுக் கொண்டுள்ளேன். பேச மட்.டும் செய்கிறேன் . எழுத தெரியவில்லை. மொழி மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த மாத கடைசியில் அமெரிக்கா செல்கிறேன். மீண்டும் பொங்கல் திருவிழாவிற்கு வருகிறேன். கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் , சிஎஸ்ஐ சர்ச் ஆகியவை அழகாக உள்ளது என்றார். வயல்வெளிகளில் நாற்று நடும் பெண்கள், கரகாட்டம் ஆடும் பெண்கள், சிறு வியாபாரிகள் ஆகிய மக்களையும் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறை, வருமானம் ஆகியவற்றை பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார். இன்னும் ஒரு வருடம் தமிழகத்தில் ஆராய்ச்சியில் ்டுபடுவேன் என்றார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சடையப்பன் கூறுகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எங்கள் ஊரில் ஆய்வுக்காக வந்துள்ளார். அவருக்கு வேண்டிய உதவிகள் செய்துள்ளோம். கிராமப்புற திருவிழாக்கள்தான் அவரை மிகவும் கவர்ந்துள்ளது. தற்போது ஆடி திருவிழா முடிந்துவிட்டபடியால் பொங்கல் பண்டிகைக்கு வருவதாக உறுதியளித்துள்ளார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்