முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.3-ந் தேதிக்குள் பள்ளிவாகன விதிறையை தாக்கல் செய்யவேண்டும்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 30 - பள்ளி வாகன விதிமுறையை செப்டம்பர் 3-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் அடுத்த சேலையூர் சீயோன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2-​ம் வகுப்பு படித்த மாணவி சுருதி பள்ளி பேருந்து ஓட்டை வழியாக தவறி விழுந்து பலியானாள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த பள்ளி பேருந்து விபத்து குறித்து சென்னை ஐகோர்ட் தானாக முன் வந்து விசாரித்தது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்க பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்ட விதிகளை வகுக்கும்படியும், அந்த சட்ட விதிகளின் வரைவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு தலைமை நீnullதிபதி இக்பால், நீnullதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் நவnullதகிருஷ்ணன் ஆஜராகி, தமிழக அமைச்சரவை இன்னும் கூடாததால் பள்ளி வாகன விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு தலைமை நீnullதிபதி இக்பால் கூறும்போது, எத்தனையோ பிரச்சினைகளுக்கு அமைச்சரவை கூடி அவசர அவசரமாக சட்டம் இயற்றுகிறது. இந்த விஷயத்தில் அரசு அக்கறை காட்டாதா? என்றார். இதையடுத்து தலைமை நீnullதிபதி இக்பால் கூறும்போது, பள்ளி வாகன விதிகளை வகுக்க கால அவகாசம் கொடுப்பது இதுவே கடைசியாகும். செப்டம்பர் 3-​ந்தேதிக்குள் தமிழக அரசு பள்ளி வாகன சட்ட விதிகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் இவ்வழக்கு செப்.3-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்