முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகேகார் மீதுரயில் மோதியதில் இருவர் பரிதாபசாவு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

திண்டுக்கல், ஆக.- 30 - திண்டுக்கல் அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கார் கடக்க முயன்ற போது ரயில் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு வயது குழந்தையும், அவரது தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் விவேகானந்தா நகர் மல்லிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(31). இவர் திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் மனோ கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். நேற்று திண்டுக்கல் அருகிலுள்ள எரியோடு நல்லமநாயக்கன்பட்டி புதூரில் நடைபெறக்கூடிய ஒரு திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றார். உடன் அவரது மனைவி சரண்யா(25), தாய்மாமன் முருகேசன்(45), மகள் சத்யா(1) ஆகியோரும் சென்றனர். காரை மனோகரன் ஓட்டிச் சென்றார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி கார் வந்து காண்டிருந்தது. ல்லமநாயக்கன்பட்டி ஆளில்லா ரெயில்வே கேட்டை கார் கடக்க முயன்ற போது கரூரில் இருந்து திண்டுக்ல்லுக்கு சரக்கு ஏற்றி வந்த ரெயில் கார் மீது மோதியது. இதில் கார் முற்றிலும் உடைந்து சுக்குநூறானது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே சரண்யாவும், முருகேசனும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில் மோதிய வேகத்தில் தனது குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் சத்யாவை சரண்யா தூக்கி எறிந்துள்ளார். இதில் சரண்யா படுகாயம் அடைந்தார். மேலும் மனோகரனுக்கு கால் எலும்பு முறிந்து தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக மனோகரனும், சத்யாவும் திண்டுக்கல்லுக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மனோகரன் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சத்யாவிற்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் மனோகரன் குடும்பத்தினர் மருத்துவமனையில் கூடி கதறி அழுதது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியது. இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago