முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பதவி? சிரஞ்சீவி சூசக பதில்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

விசாகப்பட்டினம், செப். 19  - முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார் என்று காங்கிரஸ் எம்.பி. சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பின்னணி பாடகி ஜானகிக்கு லலிதாகலா பரிஷத் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சிரஞ்சீவி, ஜானகிக்கு தங்ககாப்பு அணிவித்தார்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர். ்ஸ்வரி, நடிகைகள் ஜெயப்பிரதா, வாணிஸ்ரீ, நக்மா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சரவை மாற்றத்தோடு சேர்த்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை மாற்ற கட்சி மேலிடம் ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொது விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

கிரண் குமார் ரெட்டியை தூக்கி விட்டு உங்களை முதல்வராக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, அந்த தகவல் உண்மை இல்லை. வரும் 2014 ம் ஆண்டு வரை அவர்தான் ஆந்திர முதல்வர் என்றார்.

நீங்கள் முதல்வர் ஆவீர்களா என்று கேட்டதற்கு, கட்சி மேலிடம் என்ன பதவி அளிக்குமோ என்று நானும் உங்களைப் போலத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கட்சி மேலிடம் என்ன பதவி கொடுத்தாலும் ஏற்க தயாராக உள்ளேன் என்றார். கிரண் குமார் ரெட்டியை மாற்ற சோனியா நினைக்கையில் எந்த பதவி கொடுத்தாலும் ஏற்பேன் என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis