முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா மீறல்: குவைத்தில் இந்தியர்கள் 2,100 பேர்கைது

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

துபாய், செப். - 24 - விசா விதிகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாகக் கூறி சுமார் 2,100 இந்தியர்கள் குவைத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசா விதி மீறல், திருட்டு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ்ஈடுபட்டதாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 300 பேரின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் சென்று விவரங்களைக் கேட்டு வருகின்றனர். தடுத்து வைக்கப்பட்டோரில் சிலர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர். குவைத் போலீசாரால் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டோர் இந்தியா திருப்பி அனுப்பப்படுவதுடன் மீண்டும் குவைத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படக் கூடும். கடந்த ஆண்டும் இதே போல் ஏராளமான இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்