முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அணிக்கு எதிராக அபாரவெற்றி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, செப். - 25 - டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அபாரமாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவிய சுழ ற் பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் சாவ்லா ஆகியோருக்கு கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்று வரும் உல கக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்து அணியை நேற்று முன் தினம் சந்தித்தது. கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்தி ய அணி இங்கிலாந்து பந்து வீச்சை எளி தாக சமாளித்து ஆடி ரன்னைக் குவித் தது. இந்திய அணி இறுதியில் நிர்ணயிக்கப்ப ட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்னை எடுத்தது. ரோகித் சர்மா 55 ரன்னும், கோக்லி 40 ரன்னும், காம்பீர் 45 ரன்னும் எடுத்தனர். பின்பு களம் இறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந் த அணி 14.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 80 ரன்னில் சுருண்டது. இதனால் இந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் ஹர்பஜ ன்சிங் 4 விக்கெட்டும், சாவ்லா மற்றும் பதான் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருந் தது. சேவாக், ஜாஹிர்கான், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஹர்பஜன் சிங், பையூஸ் சாவ்லா மற்றும் அசோக் திண்டா ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. சேவாக், ஜாஹிர்கான் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்ப ட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிற்கு எதிராக சேவாக், கான் மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே அவர்கள் நீக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பெளலர்களுடன் களம் இறங்கியது. இந்த வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறியதாவது - சுழற் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசி வெற்றியி ல் முக்கிய பங்கு வகித்தனர். குறிப்பாக ஹர்பஜன் சிங் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாக பந்து வீசினார் அவர். இந்திய அணியின் சிறந்த சுழற் பந்து வீரர் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்ப ட்டது. அவருக்குப் பதிலாக இடம் பெ ற்ற ஹர்பஜனும், சாவ்லாவும் நன்கு பந்து வீசினார்கள். இதே போல ரோகித் சர்மா மற்றும் காம்பீர் ஆகியோரது பேட்டிங் அபாரமாக இருந்தது. ஆடுகளத்திற்கு தகுந்த வாறு ரோகித் சர்மாவை , யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக களம் இறக்கு வோம். ஹர்பஜன் சிங்கும், சாவ்லாவும் இந்த ஆட்டத்தில் நன்கு பந்து வீசியதால் இனி வரும் போட்டிகளில் 11 வீரர்களை தேர்வு செய்வதில் தற்போது பிரச் சினைகள் ஏற்பட்டு உள்ளது. கடுமையான முடிவே என்றாலும் சிறந்த அணியை தேர்வு செய்வோம். சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளித்தது கடு மையான முடிவே. ஆனால் அனைத்து வீரர்களும் எனக்கு ஒத்துழைப்பு கொடு த்தனர். இவ்வாறு கேப்டன் தோனி கூறினார். தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்ட ன் ஸ்டூவர்ட் பிராட் கூறியதாவது - எங்களது வீரர்கள் மோசமாக ஆடினார்கள். ஹர்பஜன் சிங் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்