முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 மே.இ.தீவு - அயர்லாந்து அணிகள் மோதியஆட்டம் மழையால் பாதிப்பு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, செப். - 26 - இலங்கையில் நடைபெற்று வரும் டி - 20 உலகக் கோப்பை போட்டியில் கொழும்பு நகரில் நடைபெற்ற மே.இ.தீவு மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பின்பு மே.இ.தீவு அணி ஒரு பந்தை கூட சந்திக்க வில்லை. ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அயர்லாந்து அணி தரப்பில், என். ஓ. பிரைன், வில்சன், ஸ்டிர்லிங், ஜாய்ஸ் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். மேற்கு இந்தியத் தீவு அணி சார்பில், கெய்ல் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்எடுத்தார். அவருக்கு ஆதரவாக எட்வ ர்ட்ஸ், ராம்பால், சம்மி மற்றும் நரீன் ஆகியோர் பந்து வீசினர். உலகக் கோப்பை போட்டியின் 11-வது லீக் ஆட்டம் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் குரூப் பி பிரிவி ல் இடம் பெற்றுள்ள மே.இ.தீவு மற்று ம் அயர்லாந்து அணிகள் மோதின. முன்னதாக இந்தப் போட்டியில் டாசி ல் வெற்றி பெற்ற மே.இ.தீவு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அயர்லாந்து அணி தரப்பில், கேப்டன் போர்ட்டர்பீல்டு மற்றும் ஸ்டிர்லிங் ஆகியோர் ஆட்டத்தை துவக்கினர். முதலில் களம் இறங்கிய அயர்லாந்து அணி மே.இ.தீவு பந்து வீச்சை சமாளி க்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவரி ல் 6 விக்கெட்டை இழந்து 129 ரன்னை எடுத்தது. என்.ஓ. பிரைன் அதிகபட்சமாக, 21 பந் தில் 25 ரன் எடுத்தார். இதில் 1 சிக்சர் அடக்கம். தவிர, கீப்பர் வில்சன் 21 ரன் னையும், ஸ்டிர்லிங் 19 ரன்னையும், ஜா ய்ஸ் 17 ரன்னையும், ஜான்ஸ்டன் 15 ரன் னையும், ஜோன்ஸ் 14 ரன்னையும், கே. ஓ. பிரைன் 13 ரன்னையும் எடுத்தனர். மே.இ.தீவு அணி சார்பில் கெய்ல் 21 ரன்னை விட்டுக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, எட்வர்ட்ஸ், ராம்பா ல், சம்மி மற்றும் நரீன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
அயர்லாந்து அ ணி 5 ஓவர்கள் விளை யாடிய நிலையில் மழை குறுக்கிட்டது. அந்த அணியின் இன்னிங்ஸ் முடிந்த பிறகும் மழை பெய்தது . இதனால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கு ம் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி 2-வது இன்னிங்சை ஆடி வெற்றி பெற முடியாத போதிலும், ரன் ரேட் அடிப்ப டையில், சூப்பர் - 8 சுற்றுக்கு தகுதி பெ ற்றது. இந்த முடிவு அயர்லாந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
-------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்