முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் - 8 சுற்று முதல் ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதல்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, செப். - 26 - இலங்கையில் நடைபெற்று வரும் டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் - 8 லீக் ஆட்டங்கள் நாளை (27) துவங்க இருக்கின்றன. சூப்பர் - 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. இதற்காக இரு அணிகளும் ஆயத் தமாகி வருகின்றன. இலங்கையில் டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 18 -ம் தேதி துவங்கியது. கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த இந்தப் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இரு க்கிறது. முன்னதாக இதில் லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இவை நேற்றுடன் முடி வடைந்தது. இந்த லீக்கில் 12 அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியை ரசிக ர்கள் ஆர்வமாக கண்டு களித்தனர். லீக்கில் பங்கேற்ற 12 அணிகளும் 4 பிரி வுகளாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவி ல் அதிக புள்ளிகள் பெற்ற 8 அணிகள் சூப்பர் - 8 சுற்றுக்கு முன்னேறின. இதி ல் 4 அணிகள் வெளியேற்றப்பட்டன. உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் - 8 ஆட்டம் நாளை (27) துவங்கி அடுத் த மாதம் 2-ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் 2 ஆட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் அணிகள் இ மற்றும் எப் ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதன் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இலங்கை அணியும் , நியூசி லாந்து அணியும் மோத உள்ளன. இந் தப் போட்டி பல்லேகல்லேவில் பிற்ப கல் 3.30 மணிக்கு துவங்குகிறது. இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக் கு 2-வது ஆட்டம் நடக்கிறது. இதில் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவு அணிகள் மோதுகின்றன. 28 -ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் பாகிஸ்தான் அல்லது வங்காளதேச அணி மோதும். இந்தப் போட்டி கொழும்பு நகரில் நடக்கிறது. 2-வது ஆட்டத்தில் இந்தி யா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. 29 -ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போ ட்டி பல்லேகல்லே நகரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. பின்பு இரவு நடக்கும் 2-வது ஆட்டத்தி ல் இலங்கை மற்றும் மேற்கு இந்தியத் தீவு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக் கா அணிகள் 30 -ம் தேதி நடக்கும் முத ல் லீக்கில் மோதுகின்றன. இந்தப் போட்டி கொழும்பு நகரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. 2-வது ஆட்டத் தில் இந்தியாவுடன் பாகிஸ்தான் அல் லது வங்காளதேச அணி மோத உள்ளது. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. மே.இ.தீவு மற்றும் நியூசிலாந்து அணிகள் அக்டோபர் முதல் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இந் தப் போட்டி பல்லேகல்லேவில் பிற்ப கல் 3.30 மணிக்கு நடக்கிறது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இல ங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. அக்டோபர் 2 -ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் அல்லது வங்காளதேச அணி மோதும். 2-வது ஆட்டத்தில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிககா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்