முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர்-8 சுற்று: இலங்கை சூப்பர் ஓவரில் திரில் வெற்றி

வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பல்லேகல்லே, செப் 28 - டி - 20 உலகக் கோப்பையில் பல்லே கல்லே நகரில் நடைபெற்ற சூப்பர் -8 சுற்றில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷான் அபாரமாக பேட்டிங் செய்து அரை சத ம் அடித்து அணிக்கு முன்னிலை பெற் றுத் தந்தார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் ஜெயவர்த்தனே, சங்கக்கரா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் ஆடினர்.  

முன்னதாக இலங்கை அணியின் பந்து வீச்சை நியூசி. வீரர்கள் எளிதாக சமாளி த்து ஆடி ரன்னை எடுத்தனர். குலசேகரா மற்றும் டி. பெரீரா நன்கு பந்து வீசினர். அவர்களுக்கு ஆதரவாக மலிங்கா மற்றும் மென்டிஸ் பந்து வீசி னர்.  

சூப்பர் - 8 சுற்றின் முதல் போட்டி பல் லேகல்லே சர்வதேச அரங்கத்தில் நேற் று பிற்பகல் நடந்தது. இதில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி ன. 

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 7 விக்கெட்டை இழந்து 174 ரன்னை எடுத்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில், துவக்க வீரர் நிக்கோல் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். அவர் 40 பந்தில் 58 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். குப்டில் 30 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அட க்கம். தவிர, மெக்குல்லம் 16 பந்தில் 25 ரன்னையும், கேப்டன் டெய்லர் 15 பந் தில் 23 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், குலசேகரா 33 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார்.  அறிமுக வீரரான டி. பெரீரா 32 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, மலிங்கா மற்றும் மென்டி ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்த னர். 

இலங்கை அணி 175 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசிலாந்து அணி வைத்தது. ஆனால் அடு த்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவ ரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த ஆட்டம் இரு அணிக்கு ம் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது. எனவே ஆட்டத்தை தீர்மா னிக்க சூப்பர் ஓவர் அளிக்கப்பட்டது. இதில் இலங்கை வெற்றி பெற்றது. 

இலங்கை அணி தரப்பில், தில்ஷான் அதிகபட்சமாக, 53 பந்தில் 76 ரன் எடுத் தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக் சர் அடக்கம். தவிர, கேப்டன் ஜெயவர் த்தனே 26 பந்தில் 44 ரன்னையும், சங்கக் கரா 14 பந்தில் 21 ரன்னையும், மேத்யூஸ் 12 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில் பிராங்ளின் 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, ஜேக்கப் ஓரம் 1 விக்கெட் எடுத்தார்.  இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக தில்ஷான் தேர்வு செய்யப் பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்