முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா டைரக்டர் சசிமோகன் மரணம்

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.2 - சரத்குமார் நடித்த சிவந்த மலர், சிறுவனாக இருந்த போது சிம்பு ஹீரோவாக நடித்த சபாஷ்பாபு, பாக்கியராஜ் நடித்த ருத்ரா உள்ளிட்ட 25 படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் சசிமோகன் (56). தற்போது தினேசன் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு தமிழில் ஓடுதளம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென வாந்தி எடுத்த அவரை உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரான கண்ணனூருக்கு சசிமோகன் உடல் நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நடக்கிறது. இவருக்கு மனைவி ஸ்ரீரஞ்சனி, 2 மகன்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்