முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நடக்கிறது திரைப்பட கலந்தாய்வு கூட்டம்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.- 3 - இந்திய சினிமாவின் நூறு ஆண்டுகள் கொண்டாட்டம் விழாவருகிற 16, 17 தேதிகளில்  சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெருகிறது. இதில் இந்திய திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.  இது பற்றிய அறிக்கை ஒன்றை ஃபிக்கி நிறுவனம் நேற்று பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- ஃபிக்கி 1927 -ல் தொடங்கப்பட்டது. ஃபிக்கி இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான தொழிற் கூடமாகும். மகாத்மா காந்தி சேவை மனப்பான்மையுடன், லாப நோக்கின்றி இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தொழிற் சாலைகளின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டது. ஊடகம் மற்றும் கேளிக்கை துறையில் ஃபிக்கி-ன் கேளிக்கை பிரிவுகளைப் தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து பல நல்ல கொள்கை மாற்றங்களை கொண்டு வந்தது. இந்த அமைப்பு தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டு அமித் மித்ரா தலைமையிலும், ஃபிக்கி -ன் பொது செயலரின் மேலாண்மையோடும் அனிமேஷன் மற்றும் கேமிங் துறையில் தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்தால் வழிமுறைபடுத்தப்பட்ட கொள்கை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து டிஜிட்டல் சார்ந்த கேபிள் டிவி முறையை இந்தியாவில் ஏற்படுத்தியது. ஃபிக்கி ஊடகம் மற்றும் கேளிக்கை வருடாந்திர வியாபார கூட்டத்தின் நான்காவது பதிப்பை, இந்திய சினிமாவின் மைல்கல்லான 100 -வது ஆண்டின் மிகப்பிரம்மாண்டமான விழாவில் வெளியிடுவதில் ஃபிக்கி பெருமையடைகிறது. இந்த நாட்டின் ஊடகம் மற்றும் கேளிக்கை துறையின் பெருமை மிகுந்த தளமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அறிவும், அனுபவமும், செயலாக்கப் பகிர்தலும் கொண்ட இப்படிப்பட்ட எம்இபிசி நிகழ்வுகளை, ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் கேளிக்கை துறையுடன் சம்மந்தப்பட்ட, கலைஞர்களையும், வல்லுனர்களையும் கொண்டு நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. கமல்ஹாசன் வழிகாட்டுதலில் இதுவரை திரைப்படம், தொலைக்காட்சி, இசை, அனிமேஷன் மற்றும் கேமிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை ஃபிக்கி எம்இபிசி நடத்தியுள்ளது. எம்இபிசி 2012 ஒலிபரப்புத்துறையின் டிஜிட்டலாக்கம் தொடர்பான கூட்டத்தொடரை நடத்துகிறது. 100 ஆண்டு இந்திய சினிமாவை, உயர் கலைஞர்களான கமல்ஹாசன், மோகன்லால், திலீப், ஜெயராம், மம்முட்டி மற்றும் பல இந்திய சினிமா கலைஞர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்கிறது. ஆஸ்கர் விருது வென்ற தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் ட்ரையாலாஜி திரைப்படத்தின் தயாரிப்பாளர்  பேரி ஆஸ்போர்ன் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். இந்த இரண்டு நாட்களும், பல சிந்தனையாளர்களின், ஆக்கத்திறனாளிகளின் வகுப்புகளும் நடக்க உள்ளது. பேச்சாளர்கள், விருந்தினர்கள், அரசு அதிகாரிகள், ஊடகம் மற்றும் பிரிவு தலைவர்கள் உள்ளிட்ட 600 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பேரி ஆஸ்போர்ன் அவரின் உரையாடலில் ``சர்வதேச திரைப்படம் தயாரிக்கும் வழிகள்'' ஒரு பல்முனை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

கமல்ஹாசன், கே.ஹரிஹரன் (தேசிய விருது வென்ற இயக்குனர் மற்றும் எல்.வி.பி. கல்வி நிலையத்தின் இயக்குனர்) மற்றும் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீநீவாஸ் ராவ் (`புஷ்பக்', `மயூரி', `தரம் மரிந்தி', `விசித்ரா சொடருலு', `மைக்கெல் மதன காமராஜன்', `ஆதித்யா 369',) ரோகன் சிப்பி மற்றும் சோரப் சுக்கலா அவர்களும் இணைந்து நடத்தும் திரைக்கதையாக்க வகுப்புகள் மற்றும் பயிலரங்குகள் நடக்கிறது.

ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் ஆக்கம் மற்றும் அதன் விஎப்எக்ஸ் குறித்த பயிலரங்கம்:

ரெட் கேமிரா கொண்டு டிஜிட்டல் திரைப்படம் தயாரித்தல் குறித்த பயிலரங்குகள்

உலகெங்கிலும் உள்ள வல்லுனர்கள் ஏற்கனவே இக்கேமிராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படக்கட்சிகளை கொண்டு அமைத்து இருக்கும் அறிமுக மூல உரை மற்ற கேமிராக்கள் முக்கியமாக ரெட் கேமிரா பற்றிய டிஜிட்டல் கேமிராவின் ஆதார சித்தாந்தம் பற்றிய காட்சிகள் உண்டு.

மேலும் அடிப்படை கேமிரா படப்பிடிப்பு யுக்திகள் டிஜிட்டல் எக்ஸ்போசுயூர் போன்றவை செய்து காண்பிக்கப்படும். டிவி மற்றும் சினிமா தயாரிப்பின் ஆதிமுதல் அந்தம் வரையிலுள்ள கட்டங்களின் வழிமுறைகள் விளக்கப்படும்.

மேலும் அச்சுத்துறை, கல்வித்துறை, மற்றும் மின்னணுவியல் துறைகளில் கணிப்பொறி கிராபிக்ஸின் உபயோகங்கள் பற்றியும் கருத்துப்பதிவுகள் நடைபெறவுள்ளன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் தியாகராஜன், பின்னணி பாடகர் ஹரிஹரன், ஃபிக்கி அமைப்பினர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்