முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் தோல்விக்கு தோனியே காரணம்: சேதன் சர்மா

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக். 5 -- 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறாமல் போனதற்கு கேப்டன் தேனியின் அணி தேர்வே காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. டெல்லியில் 16 வயதிற்குட்பட்டோருகான கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த சேதன் சர்மா மேலும் கூறுகையில், 

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைஇழந்ததற்கு ஒட்டுமொத்த அணியையும் குறைகூறி விட முடியாது.இந்தியாவின் தோல்விக்கு கேப்டன் தோனி மட்டும்தான் காரணம். அதை விட்டு விட்டு மழையால்தான் தோற்றோம் என்று சொல்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் இல்லாமல் இந்திய அணி களமிறக்கியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய அனுபவமிக்கவரான அவரை நீக்கியிருக்க கூடாது. சூழலுக்கு ஏற்றவாறு அணியை தேர்வு செய்யும் தோனியின் கொள்கைப்படி பார்த்தால் ஹர்பஜன் சிங்கை அணியிலே சேர்த்திருக்க வேண்டும் என்றார். 

ஆஸ்திரேலியாவுடனான சூப்பர் 8 சுற்றில் தோற்றதற்கு மழை குறுக்கிட்டதே காரணம் என்று 2 வது முறையாக தோனி தெரிவித்திருககிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago