முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ரஷ்யா அமைச்சர்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 5 -- ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு வரும் 10 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று இந்த சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனடோலி செர்டியுக்கோல் வேறு முக்கிய அலுவல் காரணமாக அதிபரை சந்திக்க வேண்டியிருப்பதால் டெல்லி வருவது தாமதமாகி உள்ளது. இதுவே சந்திப்பு ஒத்திவைக்கப்பட காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக ஆண்டுதோறும் இந்திய, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்து பேசுவது வழக்கம். இந்த ஆண்டில் 4 ம் தேதி நடக்கவிருந்த இந்த சந்திப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு ரஷ்யா வழங்குவதாக உறுதியளித்திருந்த 45ஆயிரம் டன் எடை கொண்ட விமானம் தாங்கி போர்க் கப்பல் கிடைப்பது தாமதமாவது குறித்து பேச முடிவு செய்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்