முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' பட வழக்கில் சமரசம்

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.7 - நடிகர் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சமரசம் ஏற்பட்டதால் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதையொட்டி நான்கு மாதங்களாக நீடித்து வந்த பிரச்சனை தற்பேது முடிவுக்கு வந்துள்ளது.

நார்த் ஈஸ்ட் பிலிம் ஓர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி என்பவர் சென்னை 2வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கள்ளத்துப்பாக்கி' என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறேன். இந்த படத்தை பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைபுலி தாணு, 'துப்பாக்கி` என்ற பெயரில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். படத்தை முருகதாஸ் இயக்குகிறார்.

நான் தயாரிக்கும் பெயரின் தலைப்பில், ஒரு பகுதியை பயன்படுத்தி படத்தை வெளியிட்டால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், 'துப்பாக்கி` என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார். இந்த இடைக்கால தடை ஒவ்வொரு முறையும் நீடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்ந்த ரவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தராமன், `மனுதாரருக்கும், எதிர்மனுதாரர்களுக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதால், இந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம்' என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'துப்பாக்கி' தலைப்புக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago