முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது அரை இறுதி: மேற்கு இந்தியத் தீவு அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஆக. 7 - டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பு நகரில் நடை பெற்ற 2-வது அரை இறுதிச் சுற்றில் மே ற்கு இந்தியத் தீவுகள் அணி 74 ரன் வித் தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், கிறிஸ் கெய்ல் மற்றும் பொ ல்லார்டு இருவரும் அதிரடியாக ஆடி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக சாமுவே ல்ஸ் மற்றும் ஜே. பிராவோ ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, ராம்பால் சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெ ட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆத ரவாக, பத்ரி, நரீன், பொல்லார்டு மற் றும் சாமுவேல்ஸ் ஆகியோர் பந்து வீசி னர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யின் 2 -வது அரை இறுதி ஆட்டம் கொ ழும்பு நகரில் உள்ள பிரேமதாசா அரங் கத்தில் நடைபெற்றது. இதில் மே.இ.தீவு மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற மே.இ.தீவு அணி பேட்டிங்கை தே ர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய அந்த அணி ஆஸி.யின் பந்து வீச்சை வெளுத்துக் கட்டியது. 

மே.இ.தீவு அணி இறுதியில் நிர்ணயிக்க ப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பி ற்கு 205 ரன்னைக் குவித்தது. கெய்ல் அபாரமாக பேட்டிங் செய்தார். 

அவர் இறுதியில் 41 பந்தில் 75 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்று ம் 6 சிக்சர் அடக்கம். 

பொல்லார்டு கடைசி கட்டத்தில் அமர் க்களப்படுத்தினார். அவர் 15 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்று ம் 3 சிக்சர் அடக்கம். தவிர, சாமுவேல் ஸ் 20 பந்தில் 26 ரன்னையும், ஜே. பிரா வோ 31 பந்தில் 37 ரன்னையும், சார்ல ஸ் 10 ரன்னையும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு இந்தப் போட்டியில் எடுபடவில்லை. கும்மின்ஸ் 36 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஸ்டார்க் மற்றும் டொகெர்டி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 206 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை மே.இ.தீவு அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 131 ரன்னில் சுருண்டது. 

இதனால் இந்த 2 -வது அரை இறுதிப் போட்டியில் மே.இ.தீவு அணி 74 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பெய்லி ஒருவர் மட்டுமே தாக்குப் பிடி த்து ஆடினார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

கேப்டன் பெய்லி 29 பந்தில் 63 ரன் விளாசினார். இதில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, மைக் ஹஸ்சே 12 பந்தில் 18 ரன்னையும், கும்மின்ஸ் 13 ரன்னையும், டொகெர்டி 9 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில் ராம்பால் 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, நரீன், பத்ரி தலா 2 விக்கெ ட்டும், சாமுவேல்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்