முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமும் - புகழும் வீரர்களை சீரழித்து விடுகிறது: அக்தர்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 8 - பணமும், புகழும் இளம் கிரிக்கெட் வீர ர்களை சீரழித்து விடுகிறது என்று பாகி ஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் வேதனையுடன் தெரிவி த்தார். தவிர, இதே பணமும், புகழும் இன்னு ம் சில வீரர்களை கிரிமினல்களாகவும் மாற்றி விடுகிறது என்றும் வேகப் புய லான அக்தர் கூறினார். 

தலைநகர் டெல்லி வந்திருந்த பாகிஸ் தான் அணியின் வேகப் பந்து வீச்சாள ரான சோயிப் அக்தர் தனியார் தொலை க்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேற்க ண்டவாறு தெரிவித்தார். 

மேலும், 18 வயதான ஒரு வாலிபரைப் பார்த்து இளம் பெண்ணைப் பார்க்கா தே என்று கூற முடியுமா? வளர்ந்து வரு ம் இளம் கிரிக்கெட் வீரர்கல் பணத்தா லும் புகழாலும் சீரழிந்து விடுகிறார்க ள். 20 வயதில் ஒரு வீரருக்கு, புகழும், பாக்கெட்டில் கோடிக் கணக்கில் பண மும் இருக்குமானால், அவரை சிலர் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கி ன்றனர் என்றும் அவர் கூறினார். 

சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் செய்ல் அறையில் இருந்து 3 இளம் பெண்க ளை இலங்கை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

டி - 20 உலகக் கோப்பை போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அரை இறுதிக்கு முன்னேறியதைத் தொடர்ந் து நடந்த பார்ட்டியின் போது மேற்கண்ட சம்பவம் நடந்தது. 

தவிர, கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பது இல்லை. இதனால் ஏமாற்றம் அடையும் வீரர்கள் ஊழலில் ஈடுபட தூண்டப்படுகிறார்கள். எனவே கிரிக்கெட் முறையில் மாற்றம் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட் வீரர்களுக்கு போதி ய சம்பளம் அளிப்பது இல்லை. கிரிக்கெட் வாரியங்களும் போதிய சந்தர்ப்பம் அளிப்பது இல்லை. இதனால் பணத்தி ற்கு ஆசைப்பட்டு வீரர்கள் பிக்சிங் போன்ற ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் அக்தர் தெரிவித்தார். 

கடந்த 2008 -ம் ஆண்டு என்னிடம் கார் வாங்க கூட பணம் இல்லை. பின்பு ஒரு நண்பரிடம் வாங்கி கார் வாங்கினேன். அதனைப் பிறர்களிடம் வாங்கி அந்த கடனை அடைத்தேன். சில நண்பர்கள் உங்களுக்கு குழி தோண்டுவார்கள். வாரியங்கள் கூட சரியான ஆதரவும் தராது என்றும் சோயிப் தெரிவித்தார். 

ஐ.பி.எல் போட்டியால் கிரிக்கெட் சீரழந்து வருகிறதா என்று அவரிடம் கேட்ட போது, ஐ.பி.எல். ஆல் கிரிக்கெட் வள ராது. இது ஒரு பிசினஸ். பொழுது போக்கு அம்சம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்