முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: ஒபாமா

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

வாஷிங்கடன், அக்.8 - தான் ஆட்சிக்கு வந்த பின் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன  என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஒஹியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்களிடையே அவர் பேசியது- நான் ஆட்சிக்கு வந்த போது மாதந்தோறும் 8,00,000 வேலைகளை இழந்து கொண்டிருந்தோம். கடந்த இரண்டரை ஆண்டுகளில் 5,20,00,000 கூடுதல் வேலைவாய்ப்புகளை நமது நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன. கடந்த செப்டம்பரில் மட்டும் 7.8 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளிலேயே இதுதான் மிகவும் குறைந்த சதவீதமாகும். எனது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான அமெரிக்கர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

பொருளாதார தேக்கத்தை தடுக்க இந்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை மிட்ரோம்னி ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து செயல்படுத்தமாட்டார் என்றார்.

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களாக வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 8.1 முதல் 8.3 சதவீதம் இருந்தது. இந்த எண்ணிக்கை இப்போது முதன் முறையாக செப்டம்பர் மாதத்தில் 7.8 சதவீதமாக குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago