முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2016 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்: மேரிகோம் நம்பிக்கை

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, அக். 13 - வரும் காமன்வெல்த்போட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  சென்னை முகப்பேரில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் ரூ. ஒரு கோடி மதிப்பிலான வேலம்மாள் நினைவு விளையாட்டு ஊக்கத் தொகை திட்டம் துவங்கப்பட்டது. அதை ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற விஜயகுமார், மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற தத், குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற மேரிகோம் ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது மேரிகோம் பேசியதாவது, 

சென்னைக்கு 2 வது முறையாக வந்து இருக்கிறேன். முதல் முறையாக 2001 ல் வந்தேன். அப்போது இங்கு நடந்த தேசிய குத்துச் சண்டையில் பட்டம் வென்ற போதுதான் தொழில்முறை வீராங்கனையாக உருவெடுத்தேன். அதனால் சென்னை எனக்கு பிடித்த இடம். நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இளம் தலைமுறையினரிடையே உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் அதிக எடை பிரிவிலான போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். அடுத்த  நடைபெறவுள்ள காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார். விஜயகுமார் பேசுகையில், 

என் வாழ்நாளில் முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளேன். லண்டன் ஒலிம்பிக் தான் எனது முதல் ஒலிம்பிக் போட்டி. இப்போது வெள்ளிப் பதக்கம் பெற்றிருப்பது தொடக்கம்தான். அடுத்ததாக வரும் போட்டிகளில் தொடர்ந்து பதக்கம் வெல்ல வேண்டும். அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். முன்னதாக, வேலம்மாள் பள்ளி தாளாளர் வேல்மோகன், விஜயகுமார், மேரிகோம், தத் ஆகியோருக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை பாராட்டி ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வீரவாட்களை பரிசாக கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்