முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெப்போலியன் வீட்டு முன்பு கேஜ்ரிவால் குழு ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2012      ஊழல்
Image Unavailable

சென்னை, அக்.15 - சென்னை ராயப்பேட்டையில் ஜெகதாம்பாள் காலனியில் உள்ள மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன் வீட்டு முன்பு நேற்று காலை சமூக ஆர்வலர் கேஜ்ரிவால் தலைமையிலான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக இந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் இருவர் பெண்கள். மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி தலைமையிலான அறக்கட்டளை, தவறான தகவல்களை கூறி மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்திடம் இருந்து பல லட்சம் மானியம் பெற்றதை கண்டித்து டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்