முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட்னி சிக்சர்ஸ் வெற்றி: சென்னை கிங்ஸ் போராடி தோல்வி

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், அக். 15 -  சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 14 ரன் வித்தியா சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.  சாம்பியன்ஸ் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங் ஸ் அணிகள் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் நே ற்று மோதின. 

இந்தப் போட்டியில் முன்னதாக டாசி ல் வெற்றி பெற்ற சென்னை அணி பீல் டிங்கை தேர்வு செய்தது. சிட்னி அணி தரப்பில், வாட்சன் மற்றும் லம்ப் இரு வரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய சிட்னி அணி சென்னை பந்து வீச்சை எளிதாக சமா ளித்து ஆடி ரன்னைக் குவித்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 5 விக் கெட் இழப்பிற்கு 185 ரன்னை எடுத்தது. 

சிட்னி அணி தரப்பில், ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 23 பந்தில் 49 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்று ம் 2 சிக்சர் அடக்கம். தவிர வாட்சன் 30 பந்தில் 46 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, லம்ப் 18 ரன்னையும், கேப்டன் ஹாடின் 20 ரன்னையும், டி. ஸ்மித் 26 ரன்னையும், மடின்சன் 12 ரன்னையும், எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், அஸ்வின் 32 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, ஜடேஜா 1 விக்கெட் எடுத் தார். 

சென்னை அணி 186 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக் கை சிட்னி அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி கடுமையாக போராடியது. இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழ ப்பிற்கு 171 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத் தது. 

சென்னை அணி தரப்பில் சுரேஷ் ரெய் னா அதிகபட்சமாக, 33 பந்தில் 57 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். டுபிளிசஸ் 25 பந்தில் 43 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, மைக் ஹஸ்சே 16 ரன்னையும், அஸ்வின் 18 ரன்னையும் எடுத்தனர். 

சிட்னி அணி சார்பில், ஸ்டார்க் 31 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஹென்ரிக்ஸ் 23 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, கும்மின்ஸ், வாட்சன் மற்றும் ஓ கீபே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹென் ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்